Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணமாகி நான்கே நாளில் தற்கொலை செய்துகொண்ட பெண் – கணவரிடம் மட்டும் சொன்ன காரணம் !

Advertiesment
திருமணமாகி நான்கே நாளில் தற்கொலை செய்துகொண்ட பெண் – கணவரிடம் மட்டும் சொன்ன காரணம் !
, புதன், 18 மார்ச் 2020 (10:28 IST)
மதுரையில் திருமணம் ஆன நான்கே நாளில் மணப்பென் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள அரசரடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் தவச்செல்வி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. மணப்பெண்ணான தவச்செல்வி, கூட்டுறவு வங்கியில் வேலைப்பார்த்து வந்துள்ளார். அவர் பணி செய்யும் இடத்தில் அதிக வேலை கொடுத்து அழுத்தம் தருவதாக தனது கணவரிடம் சொல்லியுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் சொல்லப்பட்டு, அவர்கள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதே போல அவர் வேலை செய்யும் இடத்திலும் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 147 ஆக உயர்வு!