Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காணாமல் போன செல்போனை தானே கண்டுபிடித்த இளைஞர்

Advertiesment
காணாமல் போன செல்போனை தானே கண்டுபிடித்த இளைஞர்
, வெள்ளி, 22 ஜூன் 2018 (08:20 IST)
சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய விலையுயர்ந்த ஆப்பிள் ஐபோன் காணாமல் போனதை அடுத்து தானே களமிறங்கி புலன் விசாரணை செய்து செல்போனை மீட்டுள்ளார்.
 
சென்னை பெரம்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் ஆப்பிள் ஷோரூமுக்கு சென்றுள்ளார். அங்கு தனது ஆப்பிள் ஐபோனை மறதியாக விட்டு சென்றுவிட்டார். பின்னர் தன்னுடைய ஐபோன் காணாமல் போனதை அறிந்து உடனடியாக அவர் மீண்டும் ஆப்பிள் ஷோரூமுக்கு சென்றபோது தன்னுடைய போன் திருடப்பட்டதை அறிந்தார்
 
பின்னர் அந்த ஷோரூமில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகள் மூலம் வடமாநில இளைஞர் ஒருவர்தான் தன்னுடைய போனை திருடியதை உறுதி செய்த அந்த இளைஞர் பின்னர் அவர்குறித்த விபரங்களை ஆப்பிள் ஷோரூமில் பெற்றுள்ளார்.
 
webdunia
அவரது தொலைபேசி எண்ணை வைத்து ஃபேஸ்புக் மூலம் அவரை கண்டுபிடித்த அந்த இளைஞர் பின்னர் அவரிடம் இந்தி தெரிந்த ஒரு நண்பர் மூலம் ஒரு கன்சல்டன்ஸியில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு வேலை தயாராக இருப்பதாகவும் பேசியுள்ளார், இதனை நம்பிய அந்த செல்போன் திருடியவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர் மாதவரத்தில் இருப்பதை உறுதி செய்து நேராக மாதவரத்திற்கு சென்று தன்னுடைய ஐபோனை மீட்டார். மேலும் ஐபோனை திருடிய வாலிபரை காவல்துறையினர்களிடமும் ஒப்படைத்தார். காணாமல் போன தன்னுடைய ஐபோனை கண்டுபிடிக்க தானே களமிறங்கி புலன்விசாரணை செய்த அந்த இளைஞரை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் வரை கமல் இருப்பாரா? மைத்ரேயன் கேள்வி