Publish Date: Thu, 07 Jun 2018 (13:39 IST)
Updated Date: Thu, 07 Jun 2018 (13:43 IST)
ரயில்களில் விளக்குகள், மின் விசிறிகள் காணாமல் போவது இதெல்லாம் சாதாரணம். ஆனால், ரயில் பெட்டியே திருடு போயுள்ளது என்பது நம்ப முடிகிறதா? ஆனால், இவ்வாறான சம்பவம் ராஞ்சியில் நடந்துள்ளது.
ஆம், ராஞ்சி ரயில்வே மண்டலத்தில் இருந்து ராஜ்தானி மற்றும் சம்பார்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் ரயில்களின் புதிய பெட்டிகள் காணமால் போயிருக்கின்றன. இந்த பெட்டிகள் எந்த இடத்தில் காணாமல் போனது என்பது குறித்து ராஞ்சி ரயில்வே பிரிவிடம் எந்த தகவலும் இல்லை.
ரயில்வே அதிகாரிகளிகள் இது குறித்து கூறியதாவது, ரயில் பெட்டிகள் திருடப்பட்டு எங்கே போயிருக்கும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், ரயில்வே யார்டில் நிறுத்தப்பட்டு இருந்தபோது மர்ம கும்பல் திருடி இருக்கலாம் எனறும் சந்தேகிக்கப்படுகிறது.