Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில்.. மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞருக்கு ஜாமீன்..!

Siva
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (16:11 IST)
மருத்துவரை பாலாஜியை விக்னேஷ்  என்ற இளைஞர் கத்தியால் குத்திய வழக்கில், நீதிபதி கேட்ட கேள்விக்கு போலீசார் பதிலளிக்காமல் மௌனமாக இருந்ததை அடுத்து, இளைஞர் விக்னேஷுக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை கிண்டி கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

மருத்துவர் பாலாஜியை தாக்கியதாக இளைஞர் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ், "நோயாளிக்கு சரியாக சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா?" என நீதிபதி ஜெகதீஷ் சங்கரா கேள்வி எழுப்பினார்.

ஆனால், இந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் போலீசார் மௌனமாக இருந்தனர். இதையடுத்து, விக்னேஷுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் தினமும் காலையில் விக்னேஷ் கையெழுத்து போட வேண்டும் என்றும் ஜாமீன் அளிக்கப்பட்ட இளைஞருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments