Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 11 January 2025
webdunia

பெண் ஆய்வாளரால் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

Advertiesment
பெண் ஆய்வாளரால் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
, வெள்ளி, 12 நவம்பர் 2021 (23:39 IST)
பெண் ஆய்வாளரால் தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  உதயா என்ற இளைஞர் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் கனமழை பெய்த நிலையில் டிபி சத்திரம் கிறிஸ்தவ கல்லறை ஒன்றில் மரம் சாய்ந்ததில் அங்கு தங்கியிருந்த நபர் காயமடைந்துள்ளார். அவர் மயக்கமடைந்து மரத்தின் அடியிலேயே கிடந்துள்ளார்.

மரத்தை அகற்றியபோது அவருக்கு மூச்சு இருப்பதை பார்த்த அண்ணா நகர் பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உடனே உதயா என்ற  இளைஞரை தன் தோளில் தூக்கி ஓடினார். அங்கிருந்த ஆட்டோவை வர செய்து அதில் இளைஞரை வைத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துளதார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் இளைஞரை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் அவருக்கு பலதரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  பெண் ஆய்வாளரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை- அரசாணை வெளியீடு