புலிக்குட்டி விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்த இளைஞர் கைது

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (19:43 IST)
புலிக்குட்டியை விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
வேலூரில் 25 லட்சத்துக்கு புலிக்குட்டி விற்பனை செய்வதாக ஆன்லைனில் இளைஞரொருவர் விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்தனர் 
 
விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பார்த்திபன் என்ற 24 வயது இளைஞர் தான் இந்த விளம்பரத்தை கொடுத்தவர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்த வனத்துறையினர் காவல்துறையின் உதவியுடன் அவரை கைது செய்தனர் 
 
கைதான பார்த்திபன் சென்னையில் செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதாகவும் அவரது விற்பனையகத்தில் பல விலங்குகள், பறவைகள் இருப்பதாகவும் ஆன்லைன் மூலம் பல பறவைகள் விலங்குகளை இவர் விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments