Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வியாபாரியை நிர்வாணப்படுத்தி அடித்த இளைஞர்கள் கைது

Webdunia
திங்கள், 1 மே 2023 (21:20 IST)
மதுரை தெப்பக்குளம் அருகே சைக்கிள் உரசியதாகக் கூறி வியாபாரியை நிர்வாணப்படுத்திய இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அடுத்துள்ள அனுப்பானடி பகுதியில் வசிப்பவர் வியாபாரி சுந்தர்(60). இவர் சைக்கிள் மூலம் பிஸ்க்டர் பாக்கெட்டுகளை மற்றும் தேநீர் கடைகளில் விநியோகித்து வருகிறார்.

இன்று அருப்பானடி பேருந்து நிலையம் அருகில் அவர் சென்று கொண்டிருக்கும்போது, அங்கு நின்றிருந்த இளைஞர் மீது சைக்கிள் உரசிவிட்டதாகக் கூறி வியாபாரி சுந்தரிடம் 4 இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், வியாபாரியை  நிர்வாணப்படுத்தி அடித்துள்ளனர். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த கரண்டியில் சாப்பிட்டால் உணவில் உப்பே போட வேண்டாம்: ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு..!

தமிழ்நாட்டில் பிக்சல் செல்போன்களை தயாரிக்க திட்டம்: கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை..!

பிரச்சாரத்திற்கு டெம்போ வேனில் சென்ற ராகுல்.! புகைப்படங்கள் வைரல்..!

3 ஆண்டுகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்த சாதனையையும் செய்யவில்லை: டாக்டர் ராமதாஸ்

கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலாச்சார மையமா? உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments