ஜிஎஸ்டி வரிவசூல் புதிய உச்சம் பற்றி பிரதமர் மோடி கருத்து

Webdunia
திங்கள், 1 மே 2023 (21:17 IST)
இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவசூல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவசூல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.87 லட்சத்தை எட்டியுள்ளது.

கடந்த  ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.167540 கோடி ஜிஎஸ்டி வரி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.19,485 கோடி அதிகாமாக வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கூறிய பிரதமர் மோடி’’, குறைவான அளவில் வரி விகிதம் இருந்தாலும், ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்து வருவது  ஜிஎஸ்டி  ஒருங்கிணைப்பின் வெற்றியைக் காட்டுகிறது என்று கூறினார்.

மேலும், இந்த ஜிஎஸ்டி வரி அதிகரித்துள்ளது என்பது ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பின் வெற்றியைக் காட்டுகின்றது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments