குடகுமலை மழையால் மேட்டூர் நீர்மட்டம் உயர்வது மாதிரி ஒவ்வோர் ஆண்டிலும் உன் புகழ்மட்டம் கூடிக்கொண்டே போகிறது என்று மறைந்த கருணாநிதியின் நினைவு நாளையொட்டி கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி கட்சி தொண்டர்களும், அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். அதில் குறிப்பாக பல இடங்களில் திமுகவினர் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளமான சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில் பின்வருமாறு:
நினைவுநாளுக்கும்
வேறுபாடு ஒன்றுண்டு
நீ பிறந்த நாளில்
ஒரே ஒரு தாய்க்கு மட்டுமே
பிள்ளையாகினாய்
நினைவு நாளில்
தாய்த் தமிழ் நாட்டுக்கே
மகனாகினாய்
குடகுமலை மழையால்
மேட்டூர் நீர்மட்டம்
உயர்வது மாதிரி
ஒவ்வோர் ஆண்டிலும்
உன் புகழ்மட்டம்
கூடிக்கொண்டே போகிறது
வணங்குகிறோம் உங்களை;
வாழ்த்துங்கள் எங்களை
சி.ஐ.டி காலனி
அஞ்சலியின்போது...