Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளைஞர்களே புரிந்துகொண்டு இந்த சாத்தானை விட்டு விலகிவிடுங்கள்- ராஜேஸ்வரி பிரியா

Advertiesment
இளைஞர்களே புரிந்துகொண்டு இந்த சாத்தானை விட்டு விலகிவிடுங்கள்- ராஜேஸ்வரி பிரியா
, திங்கள், 31 ஜூலை 2023 (14:51 IST)
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான். இக்கட்சியின் சார்பில் மணிப்பூரில் குகி பழங்குடி இன மக்களுக்கு எதிரான அநீதியைக் கண்டித்து, நேற்று  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமமான், மணிப்பூரில் இருந்து மக்கள் யாரும் வந்து நமக்கு ஓட்டுப்போவதில்லை, இங்கேயுள்ள கிரிஸ்தவர்களும் நமக்கு ஓட்டளிக்கப் போவதில்லை… கிருஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள்  தேவனின் பிள்ளைகள் என்று  நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் சாத்தானின் குழந்தைகள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதற்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா சீமானை விமர்சித்துள்ளார்.
webdunia

இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் இனமாகவும் மதமாகவும் வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் சீமான் போன்ற அரசியல் வியாபாரிகள் அரசியலைவிட்டு விரட்டபட வேண்டியவர்கள்.

இளைஞர்களே புரிந்துகொண்டு இந்த சாத்தானை விட்டு விலகிவிடுங்கள்'' என பதிவிட்டு  சீமானை டேக் செய்துள்ளார். ’’ என்று தெரிவித்துள்ளார்.



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழையத்தடை: அறிவிப்பை வைக்க நீதிபதி உத்தரவு