தமிழக அரசு சில வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி சிலர் மீன் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மீன் வள ஆதாரம் பாதிக்கப்படுவதுடன், தங்ளின் வாழ்வாதரமும் பாதிக்கப்படுவதாக் கூறி தரங்கம்பாடியில் வசித்து வரும் சுமார் 22 கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சுருக்கு வலைக்கு ஆதரவாக போராடி வரும் மீனவர்களைத் தாக்குவதற்காகச் சென்ற ஒரு இளைஞரைப் பிடிக்க முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை மீனவ இளைஞர்கள் தாக்கினர். இதில் அவருக்கு மண்டை உடைந்தது.
மீனவர்களின் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில் நாகை மாவட்ட காவக் கண்காணிப்பாளர் மீனவர்களுட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.