தமிழகத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை தனித்து எதிர்கொள்ள உள்ளதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் கள செயல்பாடுகள் என பரபரப்புடன் இயங்கி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களை சந்தித்தது போன்ற சம்பவங்களால் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்க பேசி வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் “சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள். வரும் தேர்தலில் சீமான் ஆட்டத்தை பார்ப்பீர்கள். 2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் 5வது முறையாக தனித்து போட்டியிடுவோம். நாங்கள் அரசியல் வியாபாரம் செய்வதற்காக வந்தவர்கள் இல்லை. கூட்டணி வைத்து வெற்றி பெற்றவர்கள் எல்லாம் என செய்து விட்டார்கள்?” என்று பேசியுள்ளார்.
ஏற்கனவே தமிழக சட்டமன்ற தேர்தல் திமுக, அதிமுக, தவெக என மும்முனை போட்டியாக உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டி என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K