Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி

Advertiesment
yoga
, செவ்வாய், 21 ஜூன் 2022 (23:42 IST)
உலக யோகா தினமான  இன்று கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று யோகா தினம் கொண்டாடப்பட்டது.
 
ஆரோக்கிய வாழ்விற்கு யோக பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில்,கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் V.V. செந்தில்நாதன் அவர்கள், கரூர் மேற்கு ஒன்றியம், புகளூர் நகரம் சார்பாக நடத்தப்பட்ட இந்த பயிற்சியில், வேலாயுதம்பாளையத்தில் கலந்து கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியின் பயிற்சியாளராக, கரூர் மாவட்ட பார்வையாளர் திரு. சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியில் மாநில பட்டியல் அணி துணைத் தலைவர் தலித் பாண்டியன். மாநில மருத்துவரணி செயலாளர் அரவிந்த் கார்த்திக்.
 
மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் தீன சேனன், கரூர் மேற்கு ஒன்றிய தலைவர் நல்லசிவம் புகலூர் நகர தலைவர் கோபி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகிலேயே இளம் வயது யோகா பயிற்றுவிப்பாளர் இவர் தான் !