Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகிலேயே போக்குவரத்து நெருக்கடியான நகரங்கள்.. சென்னைக்கு எந்த இடம்?

Siva
திங்கள், 13 ஜனவரி 2025 (18:06 IST)
உலகிலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இதில் சில இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. சென்னை எந்த இடத்தில் உள்ளது என்று பார்ப்போம்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலை டாம் டாம் என்ற நிறுவனம் வெளியிட்டது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை இந்தியாவின் கொல்கத்தா நகரம் பிடித்துள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் பெங்களூரு மற்றும் புனே உள்ளன.

கொல்கத்தாவில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 34 நிமிடங்கள் 33 வினாடிகள் தேவைப்படுவதாகவும், பெங்களூரில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க  34 நிமிடங்கள் 10 வினாடிகள் தேவைப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், புனேயில் 10 கிலோ மீட்டரை கடக்க 33 நிமிடங்கள் 22 வினாடிகள் தேவைப்படுகிறது.

இந்த பட்டியலில் ஹைதராபாத் 18-வது இடத்தில் உள்ளது,  சென்னை 31-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தேவைப்படுகிறது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ.. ஒரு மணி நேரத்திற்கு லட்சத்தில் செலவு செய்யும் கோடீஸ்வரர்கள்..!

நாளை முதல் 4 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரங்கள்..!

மகா கும்பமேளா: உத்தரபிரதேச அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறதா?

பொங்கல் பண்டிகை.. தமிழகத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கரும்புகள்..!

ஜெயலலிதாவின் சொத்துக்கள் தீபாவிடம் ஒப்படைக்கப்படுகிறதா? கர்நாடக ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments