Publish Date: Mon, 15 Mar 2021 (18:09 IST)
Updated Date: Mon, 15 Mar 2021 (18:52 IST)
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுப்பு வழங்க தேர்தல் ஆணைய உத்தரவிட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் தமிழக அரசியல்களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்தனர்.
தற்போது தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது., தமிழகத்தில் உள்ள அனைத்து ஐடி நிறுவனங்கள், கம்பெனிகள், தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள், உள்ளிட்ட அனைத்துக் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.
எனவே தொழிலாளர் நலத்துறை,ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதல் அன்று பணியாளர்களுக்கு முழு ஊதியத்துடன் விடுமுறை வழங்க தற்போது உத்தரவிட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.