சுய முன்னேற்றத்தினால் தயாரிக்கப்படும் சோபாக்கள் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் அனுப்பினாலே ஒருநாளில் நேரத்தில் ஆர்டர் ரெடி – கரூர் அருகே பெண்கள் சோபாக்கள் தயாரிப்பில் பெண்கள் கலக்கி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, க.பரமத்தி ஒன்றியம், தென்னிலை பகுதியை அடுத்த ஆர்த்திப்பாளையம் என்னும் பகுதியினை சார்ந்தவர் ப.சுப்பிரமணி (வயது 52), இவர் ஏற்கனவே சோபா தயாரிக்கும் தொழிலில் சென்னையில் ஷோபா தயாரிக்கும் நிறுவனம் வைத்து இருந்தார். இந்நிலையில் சொந்த ஊரில் பணியை ஆரம்பிக்க திட்டமிட்டு கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் தென்னிலை கீழ்பாகம், ஆர்த்திப்பாளையம் பகுதியில் சொந்த இடத்திலேயே ஷோபா தயாரிக்கும் நிறுவனத்தினை தனது மகன் அபிநந்தகுமாருக்கு வைத்துக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், பி.இ., மற்றும் எம்.பி.ஏ பட்டப்படிப்புகளை படித்த அபிநந்தகுமார், ஷோபா தயாரிப்பில் முழுநுட்ப வேலைகளையும் கற்றுக் கொண்டதோடு, இதே பகுதியில் தென்னிலை, அய்யம்பாளையம், சம்பங்கரை ஆகிய பகுதிகளில் வசித்து வரும் பெண்களுக்கு அந்த தொழில்நுட்பத்தினை கற்றுக் கொடுத்ததோடு, அவர்களுக்கு பயிற்சி கொடுத்ததோடு, கிராம புற பெண்களின் மேம்பாட்டிற்காக, சுமார் 15 பெண்களை கொண்டு., ஒரே ஒரு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் சோபா வின் டைப் ஐ காண்பித்தால் போது, அதை மரத்தின் மூலம் ஸ்டெரெக்ஷர் ரெடி செய்து அதில் ரெக்ரான், போம் ஆகியவற்றுடன் இரும்பு ஸ்பிரிங்க் கொண்டு ரெக்ஷின் உதவியுடன் சோபாவினை ஒருநாளில் உருவாக்குகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் டோர்டெலிவரி செய்யப்படுகின்றது.
சுமார் 10 ஆயிரம் முதல் சுமார் 2 லட்சம் வரை தயாரிக்கப்படும் இந்த ஷோபாவினை ஆன்லைன் மூலம் இல்லாமல், சொந்த உற்பத்தி முறை கொண்டு, ஏற்கனவே வாங்கப்பட்ட கஸ்டமர் மூலம் ஊக்கப்படுத்தப்பட்டு இந்த ஷோபா விற்பனை களை கட்டுகின்றது. கரூர் மாவட்டம் என்றாலே, டெக்ஸ்டைல், பஸ்பாடி, கொசுவலை என்கின்ற பெயர் தற்போது போய், இந்த பெண்கள் படைத்து வரும் ஷோபாக்கள் தான் என்ற பெயர் தற்போது உருவெடுக்க உள்ளது என்றால் மிகையாகாது. தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த ஷோபாக்கள் விற்பனையாகி வரும் நிலையில் இதுவரை வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற அன்றைய அறியாமை காலத்தில் இருந்து பல்வேறு தொழில்களில் பெண்கள் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த ஷோபா தயாரிப்பில் ஒரு கலக்கு கலக்கும் சூப்பர் பெண்களினால் ஷோபா தயாரிப்பும் புத்துணர்வு பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.