Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுவே உங்களுக்கு இறுதி வெற்றி: செந்தில் பாலாஜி பரபரப்பு பேச்சு

Advertiesment
இதுவே உங்களுக்கு இறுதி வெற்றி: செந்தில் பாலாஜி பரபரப்பு பேச்சு
, வெள்ளி, 28 டிசம்பர் 2018 (14:19 IST)
கரூர் எம்.பி., யும் மக்களவை துணை சபாநாயகராக பதவி வகித்து வரும் கடைசி வெற்றிதான் இது 2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., சார்பில் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம் என்று கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.



கரூர் மாவட்ட தி.மு.க., கட்சியின் பொது கூட்டம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்கள் 30 ஆயிரத்து 625 நபர்களுடன் கட்சியில் இணைந்தார். இந்த பொது கூட்டத்தில் செந்தில்பாலாஜி பொது கூட்ட மேடையில் பேசும் போது, தந்தை 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்வான் என்பது மரபு, அதற்கும் தாண்டி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரத பிரதமரை தேர்வு செய்யும் அளவிற்கு உள்ளார் ஸ்டாலின். பாரத பிரதமரே எழுந்து வணங்ககூடிய கரூர் பாராளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை என்ன செய்தார், இதுவே உங்களுக்கு இறுதி வெற்றி. வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் யாரை வேட்பாளாரக அறிவிககிறார்களோ அவர்களே வெற்றி பெற செய்வோம். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம்.
முதல்வர் பழனிசாமி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களை சந்தித்து வாக்கு பெற்று முதல்வர் பதவியில் அமர்ந்தால் நான் என்னுடைய அரசியலிருந்து விலகி கொள்கிறேன். 2019 ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வந்தால் 234 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும். ஸ்டாலின் முதல்வர் பொருப்பேற்கும் போது தற்போது தமிழகத்தில் உள்ள முதல்வர், துணை முதல்வர் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு கம்பியை என்னிகொண்டிருப்பார்கள் என்று பேசினார்.
 
சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சூப்பர் ஸ்டாரின்’ வங்கி கணக்குகள் முடக்கம் : ஜி.எஸ். டி. துறை அதிரடி