Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலிக்கலீனா கொன்னுடுவேன்... பெண் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபர் !

Advertiesment
காதலிக்கலீனா கொன்னுடுவேன்... பெண் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபர் !
, புதன், 23 அக்டோபர் 2019 (19:20 IST)
சத்தியமங்களத்தில், காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து ஒரு இளைஞர்   மிரட்டிய  சம்பவம்  பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் அருகே உள்ள பட்டரமங்கலம் என்ற பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார். இவர் அங்குள்ள ஒரு பெண்ணை இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்ததாகக் கூறப்படுகிறது. 
 
ஆனால், சமீப காலமாக அப்பெண் சிவக்குமாருடன் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். அதனால் கோபம் அடைந்த அவர், இன்று சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி சாலையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த அப்பெண்ணில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தன்னைக் காதலிக்குமாறு மிரட்டியுள்ளார், காதலிக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாகவும் எச்சரித்துள்ளார்.
 
அதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிவக்குமாரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிபிசி 100 பெண்கள் - பெண்களின் எதிர்காலம்!!