Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாயை கணவன் காட்டில் விட்டதால் மனைவி தீக்குளிப்பு

Advertiesment
நாயை கணவன் காட்டில் விட்டதால் மனைவி தீக்குளிப்பு
, சனி, 9 ஜூலை 2016 (09:07 IST)
வீட்டில் தொந்தரவாக இருந்த நாயை கணவன் காட்டில் கொண்டு போய் விட்டு வந்ததால் மனமுடைந்த மனைவி தன் உடல் மீது மண்ணென்ணையை ஊற்றி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.


 
 
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் பெருமாள். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி உயர் ரக நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வருகிறார். இது பிடிக்காத அவருடைய கணவர் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
 
இந்நிலையில் அந்த நாய் குட்டிகளை ஈன்றது. இதனையடுத்து அந்த நாயும், அதன் குட்டிகளும் சத்தம்போட்டவாரே இருந்ததால் ஆத்திரமடைந்த பெருமாள் அந்த நாய்களை ஒரு சாக்குப் பையில் போட்டு அடைத்து காட்டில் கொண்டு போய் விட்டு வந்து விட்டார்.
 
வெளியில் சென்றிருந்த சாந்தி வீட்டில் வரும் போது நாய்கள் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்து தனது கணவரிடம் கேட்டார். நாய்களின் தொல்லை தாங்க முடியாமல் காட்டில் கொண்டுபோய் விட்டு வந்ததை கூறினார் அவர்.
 
இதனால் மனமுடைந்த சாந்தி வீட்டில் இருந்த மண்ணென்ணையை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அருகாமையில் உள்ளவர்கள் சாந்தியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறை இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13 வயது மகளை கள்ள காதலனுக்கு விருந்தாக்கிய தாய்