Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

13 வயது மகளை கள்ள காதலனுக்கு விருந்தாக்கிய தாய்

Advertiesment
13 வயது மகளை கள்ள காதலனுக்கு விருந்தாக்கிய தாய்
, சனி, 9 ஜூலை 2016 (08:37 IST)
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் சமையல் வேலை பார்த்து வரும் 38 வயதான பெண் ஒருவர் தன்னுடைய கள்ள காதலனுடைய ஆசைக்கு தான் பெற்ற மகளையே அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சமையல் வேலை பார்க்கும் அந்த பெண்ணும், சமையல் மாஸ்டர் ஒருவருக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வரும் சமையல் மாஸ்டர் 13 வயதான அந்த பெண்ணின் மகள் மீது மோகம் கொண்டு அந்த பெண்ணிடம் அவளது மகளை திருமணம் செய்து கேட்டுள்ளார்.
 
அந்த தாய்க்கு எது கண்ணை மறைத்ததோ தெரியவில்லை, தான் பெற்ற மகளை மதுரையில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்து சென்று, கள்ள காதலுடன் தனிமையில் இருக்க வற்புறுத்தியுள்ளார்.
 
ஆனால் சிறுமி இதற்கு சம்மதிக்காமல் சத்தமிட்டதால் சமையல் மாஸ்டர் சிறுமியை, விட்டு விட்டு ஓடிவிட்டார். பின்னர் நடந்த சம்பவத்தை அந்த சிறுமி தனது பள்ளி ஆசிரியரிடம் கூற, அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமி நெல்லையில் உள்ள சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதில் தொடர்புடையவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவுட்: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு