Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடுறீங்களா.. தீக்குளிக்கவா? – நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (12:06 IST)
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நிலையில் தடுப்பூசி போடாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக பெண் மிரட்டியது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் ஒரு நாளைக்கு 60 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள சென்ற பெண் தனக்கு தடுப்பூசி வழங்கப்படாத விரக்தியில் தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவரை அதிகாரிகள் சிலர் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments