Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகதோஷ பரிகாரம் என்ற பெயரில் குழந்தை பலி! – மூடநம்பிக்கையால் கொடூரம்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (11:24 IST)
தெலுங்கானாவில் பரிகாரம் செய்வதாக 6 மாத குழந்தையை தாயே பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக மூட நம்பிக்கைகளின் பேரில் குழந்தைகளை பலி கொடுக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அப்படியான ஒரு சம்பவம் தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சூர்யபேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் ஜோதிடம் பார்க்க ஜோசியக்காரர் ஒருவரிடம் சென்றுள்ளார். அந்த ஜோசியர் அந்த பெண்ணுக்கு நாகதோஷம் இருப்பதாக கூறியதாக தெரிகிறது. மேலும் அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய பூஜைகள் நடத்தி பெண்ணின் 6 மாத குழந்தையை பலி கொடுக்க வேண்டும் என சொல்ல, அந்த பெண்ணும் ஒப்புக்கொள்ள நிவர்த்தி என்ற பெயரில் குழந்தையை கொன்றுள்ளனர்.

இந்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஜோசியரை போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments