Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளக்காதலுடன் விஷம் குடித்த பெண் சாவு! இளைஞர் உயிர் ஊசல்

Advertiesment
கள்ளக்காதலுடன் விஷம் குடித்த பெண் சாவு! இளைஞர் உயிர் ஊசல்
, வியாழன், 17 ஜனவரி 2019 (11:12 IST)
கன்னியாகுமரி விடுதியில்   கள்ளக்காதலுடன்  விஷம் குடித்த பேண பரிதாபமாக உயிரிழந்தார். காதலன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


 
கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் தனியார் தங்கும் விடுதி  செயல்பட்டு வருகிறது. கடந்த 14-ந்தேதி காலை 7 மணி அளவில் இந்த விடுதிக்கு இளம்பெண் ஒருவருடன் இளைஞர் ஒருவர் வந்து அறை எடுத்து தங்கினார். 
 
தினமும் காலையில் லாட்ஜ்யில் இருந்து புறப்படும் அந்த ஜோடி பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு இரவு மீண்டும் லாட்ஜிக்கு திரும்பி விடுவார்கள்.
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அவர்கள் இருவரும் வழக்கம் போல வெளியில் சென்று விட்டு இரவு தாங்கள் தங்கி இருந்த லாட்ஜிக்கு திரும்பினார்கள். நேற்று காலையில் லாட்ஜ் ஊழியர்கள் அங்கு தங்கி இருப்பவர்களின் அறைகளுக்குச் சென்று அவர்களுக்கு உணவு தேவையா? என்பது பற்றி கேட்டனர்.
 
இந்த ஜோடி தங்கி இருந்த அறை கதவை தட்டிய போது திறக்கப்படவில்லை. அதே சமயம் அறை உள்ளே இருந்து வாலிபரின் அலறல் சத்தம் கேட்டது.  இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த லாட்ஜிக்கு விரைந்துச் சென்றனர். அறைக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளேச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
 
அங்கு அந்த வாலிபர் கையில் ரத்தம் வடிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவருடன் தங்கி இருந்த இளம்பெண் வி‌ஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார்.
 
உடனடியாக அந்த வாலிபரை காப்பாற்றி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
அந்த பெண்ணின் பிணம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரியவந்தது.
 
அந்த வாலிபர் பெயர் சதீஷ் (வயது27), ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கருமாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
 
அவருடன் தங்கி இருந்த பெண்ணின் பெயர் கார்த்திகா(24). கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கடத்தூர். இவருக்கு திருமணமாகி விட்டது. சதீஷ் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கார்த்திகா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேலைக்குச் செல்லும் போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.
 
இவர்களது கள்ளக்காதல் உறவினர்களுக்கு தெரிய வந்ததால் அவர்கள் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்யும் எண்ணத்துடன் கன்னியாகுமரிக்கு வந்தனர்.
 
இங்கு பல இடங்களையும் சுற்றிப்பார்த்த அவர்கள் லாட்ஜியில் வைத்து வி‌ஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளனர். இதில் கார்த்திகா இறந்து விட்டார்.
 
சதீஷ்சுக்கு வாந்தி ஏற்பட்டதால் அவர் சாப்பிட்ட வி‌ஷ மாத்திரையில் இருந்து தப்பி விட்டார். ஆனாலும் கள்ளக்காதலி இறந்த பிறகு தான் உயிர் வாழக்கூடாது என்பதற்காக கத்தியால் கையை அறுத்து உள்ளார். அதற்குள் போலீஸ் வந்து அவரை காப்பாற்றி உள்ளனர். இது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெக்கார்டை தகர்த்த மது விற்பனை: பொங்கல் கலெக்‌ஷன் இத்தனை கோடிகளா?