Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலுக்குக் குறுக்கே நின்ற அக்கா! காதலனுடன் சேர்ந்து கொலை செய்த தங்கை!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (15:54 IST)
நாமக்கல் மாவட்டத்தில் தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்காவை காதலனுடன் சேர்ந்து சேர்ந்து கொலை செய்துள்ளார் ஒரு பெண்.

நாமக்கல் அருகே கொசவம்பட்டி தேவேந்திர நகரப் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி வத்சலா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்பட 3 குழந்தைகள். இந்நிலையி இவர்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ராகுல் என்ற இளைஞரை சந்திரனின் இளைய மகள் காதலித்துள்ளார். அதற்கு அவரது அக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதனால் காதலர்கள் இருவரும் சேர்ந்து அக்காவைக் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதன் படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காதலனுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார் தங்கை. அவர் வந்தவுடன் இருவருமாக சேர்ந்து அவரின் கழுத்தை நெறித்துள்ளனர். பின்னர் அவரது கையில் பிளேடால் கிழித்துள்ளனர்.

இதையடுத்து தனது பெற்றோருக்கு போன் செய்த அந்த பெண் அக்கா கையைக் கிழித்துகொண்டுள்ளதாக சொல்லியுள்ளார். அவர்கள் வந்து மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தற்கொலை வழக்காக போலீஸார் இதைப் பதிவு செய்ய பிரேதப் பரிசோதனை முடிவில் அவர் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலிஸார் அந்த பெண்ணின் தங்கையிடம் நடத்திய தீவிர விசாரணையில் காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருநங்கைகள் பெண்கள் கிடையாது! அவர்களுக்கு சலுகையும் கிடையாது! - அங்கீகாரத்தை ரத்து செய்த நீதிமன்றம்!

பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்.. முதல்வருக்கு தமிழிசை கோரிக்கை..

2 நாள் தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? நிப்டி சென்செக்ஸ் விவரங்கள்..!

ரூ.71,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சம் எப்போது வரும்?

ஒளரங்கசீப் கல்லறையை பாதுகாக்க ஐநாவுக்கு கடிதம்: முகலாய வம்சத்தின் வாரிசு அதிரடி

அடுத்த கட்டுரையில்
Show comments