Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளக்காதலில் ஏற்பட்ட சிக்கல் – கொலை செய்து கணவனுக்கு மெஸேஜ் அனுப்பிய நபர் !

Advertiesment
கள்ளக்காதலில் ஏற்பட்ட சிக்கல் – கொலை செய்து கணவனுக்கு மெஸேஜ் அனுப்பிய நபர் !
, திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (10:15 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளக்காதலியோடு ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக அவரைக் கொன்று வெளிநாட்டில் உள்ள அவரது கணவருக்கு வாட்ஸ் ஆப்பில் மெஸேஜ் அனுப்பியுள்ளார் ரங்கையா எனும் நபர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னைப்பட்டி எனும் கிராமம் உள்ளது.  அந்த ஊரைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்குப் பாண்டிச்செல்வி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன. குடும்ப சூழல் காரணமாக பெருமாள் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி பாண்டிச்செல்விக்கும் அந்த ஊரில் உதவி கிராம நிரவாக அலுவலராக பணிபுரிந்து வரும் ரெங்கையா என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி 100 நாள் வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்ற பாண்டிச்செல்வி வீடு திரும்பவில்லை. இது சம்மந்தமாக பாண்டிச்செல்வியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அதிர்ச்சியளிக்கும் விதமாக வெளிநாட்டில் இருக்கும் பெருமாளின் செல்போன் எண்ணுக்கு மெஸேஜ் ஒன்று வந்துள்ளது.

அதில் ‘உனது மனைவியை நான் கொன்று புதைத்துவிட்டேன். என்னை மன்னித்து விடு’ என இருந்ததைப் பார்த்து பெருமாள் அதிர்ச்சியடைந்துள்ளார். இதை உறவினர்களிடம் தெரிவிக்க போலீஸார் ரெங்கையாவை விசாரணை செய்ய ‘பாண்டிச்செல்வியோடு ஏற்பட்ட சண்டையால் அவரைக் கொலை செய்து வாழைக்குறிச்சி பகுதியில் உள்ள கண்மாயில் புதைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்துப் போலீஸார் அந்த இடத்தில் தோண்டி பாண்டிச்செல்வியின் பிணத்தை எடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வருக்கு பதவிப் பயம் வந்துவிட்டதா ? – சிபிஎம் கட்சி விமர்சனம் !