Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் காதலியை தனிமையில் அழைத்து கொலை செய்த காதலன் – நாமக்கல்லில் பரபரப்பு !

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (09:41 IST)
நாமக்கல்லில் முன்னாள் காதலியை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் இளைஞர் ஒருவர்.

நாமக்கல் பேருந்துநிலையம் அருகே தள்ளுவண்டிக் கடை வைத்து நடத்தி வந்தவர் திருமங்கை. அவரது கடையில் தினசரி சாப்பிட வந்துகொண்டிருந்த தனபால் என்பவரைக் காதலித்து வந்துள்ளனர். ஆனால் சில மாதங்களுக்கு முன் கடையை மூடிவிட்டு திருமங்கை வேறு வேலைக்கு சென்றுள்ளார்.  அங்கு ரமேஷ் என்பவரை சந்தித்து அவரோடு காதல் ஏற்பட்டு திருமணமும் செய்துள்ளார்.

இதையறிந்த தனபால் அவர்மேல் ஆத்திரம் கொண்டு அவரைப் பழிவாங்க திட்டமிட்டுள்ளார். அதனால் அவரை ஒரே ஒரு முறை தனிமையில் சந்திக்கவேண்டும் என நைச்சியமாக பேசி வரவழைத்துள்ளார். இதையடுத்து இருவரும்மூலனூர் அமராவதி ஆற்றங்கரை அருகே சந்தித்துள்ளனர். அப்போது திருமங்கையை  கொலை செய்து அவரது சடலத்தை முட்புதரில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தனபால் தலைமறைவாகியுள்ளார்.

இதற்கிடையில் தனது மனைவியைக் காணவில்லை என ரமேஷ் அளித்த புகாரை அடுத்து தேடிய போலிஸார் ஆற்றங்கரை அருகே திருமங்கையின் உடலைக் கண்டெடுத்து பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

இன்று முதல் UPI பயனர்களுக்கு புதிய விதிகள் அமல்.. என்னென்ன மாற்றங்கள்?

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments