Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலித் இளைஞரைக் காதலித்த மகள் – மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய தாய் !

Advertiesment
தலித் இளைஞரைக் காதலித்த மகள் – மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய தாய் !
, வியாழன், 21 நவம்பர் 2019 (09:34 IST)
நாகை மாவட்டத்தில் தலித் பையனை காதலித்ததற்காக தனது மகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நாகை மாவட்டத்தில் உள்ள வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி எனும் 17 வயது மாணவி. இவர் அதேப்பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ராஜ்குமார் என்பவரை அவர் காதலித்துள்ளார். இந்த காதல் விவகாரம் அறிந்த உமா மகேஸ்வரியின் தாய் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால் உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்த்து தன் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் அதற்கு உமா மகேஸ்வரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக தாய்க்கும் மகளுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது.ஒரு கட்டத்தில் மகளின் பிடிவாதத்தைப் பார்த்து ஆத்திரம் அடைந்த தாய் தூங்கிக்கொண்டிருந்த உமா மகேஸ்வரி மேல் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துள்ளார். அதன் பின்னர் தன் மேலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்த அவர்கள் இருவரிடமும் நீதிபதி வாக்குமூலம் பெற்றார். இதையடுத்து மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய்க்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் செல்வாக்கை மறைக்க நரிக்கணக்கு போடும் கமல்: அதிமுக நாளேடு விமர்சனம்