ஸ்டெபி என்ற பெண்ணின் மீது கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து நடந்த விசாரணையில் அவர் இதுவரை 1.18 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சென்னை சேலையூரைச் சேர்ந்த பூபதி என்பவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அவர் அளித்த புகாரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டெபி என்ற பெண் தனக்கு மாநகராட்சியில் பணி நிரந்தரம் வாங்கி தருவதாக கூறி அதற்காக 5 லட்சம் ரூபாய் கேட்டார். தனக்கு பல அரசியல் வாதிகளோடு நெருங்கிய பழக்கம் இருப்பதாகவும் அது சம்மந்தமான புகைப்படங்களையும் காட்டியுள்ளார்.
இதைநம்பி அவர் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆனபின்னரும் வேலை வாங்கித் தரவில்லை. இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு போலிஸார் தலைமறைவாக இருந்த ஸ்டெபியை தேடி கைது செய்துள்ளனர். பின்னர் நடத்திய விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளில் 35 பேருக்கு மேல் அவர் இதுபோல 1.18 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.