Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேமுதிக வேட்பாளர் திமுகவுக்கு தாவலா? – ஈரோடு கிழக்கில் பரபரப்பு!

Advertiesment
தேமுதிக வேட்பாளர் திமுகவுக்கு தாவலா? – ஈரோடு கிழக்கில் பரபரப்பு!
, வெள்ளி, 27 ஜனவரி 2023 (10:08 IST)
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேமுதிக வேட்பாளர் திமுகவுக்கு தாவ போவதாக பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த இடைத்தேர்தலை தனித்து நின்று போட்டியிடுவதாக அறிவித்த தேமுதிக வேட்பாளராக ஆனந்த் என்பவரை அறிவித்தது.

ஆனால் அவர் திமுகவுக்கு தாவப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேமுதிக வேட்பாளர் ஆனந்த், பெரிய கட்சிகளே வேட்பாளரை அறிவிக்க தயங்கும் நிலையில் தேமுதிக வேட்பாளரை அறிவித்துள்ளதாகவும், தான் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாகவும், தனது பெயரை கெடுக்க இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

600 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 60 ஆயிரத்திற்கும் குறைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!