Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாங்கள் வாரிசுகள்தான்.. ஆனால் கோட்பாடு, கொள்கைகளுக்கு! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

MK Stalin
, வியாழன், 26 ஜனவரி 2023 (09:16 IST)
திமுக அரசை வாரிசு அரசியல் எதிர்கட்சிகள் விமர்சிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

திருவள்ளூரில் நேற்று நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “தமிழ் வாழவேண்டும் என்பதற்காகத் தம்முயிர் தந்த தியாகிகளின் மொழிமான உணர்வைப் போற்றும் நாள்! இந்திய ஒன்றியத்தின் எத்தனையோ மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையைத் தமிழ்நாடு தன் தியாகத்தால் காத்ததை நினைவுகூரும் நாள்!

1938 தொடங்கி இன்று வரை இந்தி ஆதிக்கவாதிகளும் விடுவதாக இல்லை; நாமும் நமது உறுதிப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. மொழிப்போர்க்களத்தின் சூடு இன்னும் தமிழ்நாட்டில் அணையவில்லை. எப்பக்கம் இந்தியைப் புகுத்த நினைத்தாலும் தமிழ்நாடு எதிர்க்கும்! கழகம் மொழிக்காப்பு இயக்கமாக முன்னிற்கும்!” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் “பாஜக இந்தியை திணிப்பதை வழக்கமாக செய்து வருகிறது. தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பெயரில் ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை அழிக்க பார்க்கிறது.

ஜெயலலிதா இருந்த வரை தமிழ்நாட்டில் நீட் இல்லை. அவர் இறந்த பின் நீட் உள்ளே வந்தது. பச்சை துண்டு போட்டு கொண்டு மக்களுக்கு பச்சை துரோகம் செய்தனர். மக்களுக்கு துரோகம் இழைத்தது அதிமுக ஆட்சி. ஆனால் நாங்கள் குடியுரிமை, வேளாண், நீட் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம்.

வாரிசுகள் என சொல்பவர்களுக்கு சொல்கிறேன்.. நாங்கள் கோட்பாடுகளுக்கு, கொள்கைகளுக்குதான் வாரிசுகள்” என்று பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் தமிழ் உள்பட 13 மொழிகளில் தீர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி