சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளை தோற்கடித்து அபார வெற்றி பெற்ற தினகரனுக்கு எதிராக பல வியூகங்கள் வகுக்கப்படுவதாகவும், அவர் பதவியேற்ற ஒருசில நாட்களில் அவரை தகுதி நீக்கம் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஒரு வேட்பாளர் சட்டமன்ற தேர்தலின்போது ரூ.28 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள் தினகரன் செய்த செலவுகளை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அவர் பிரச்சாரம் செய்தபோது அவருடன் சென்றவர்கள் எத்தனை பேர், அதற்கு அவர் செய்த செல்வு குறித்து பதிவு செய்துள்ளார்களாம். நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக செலவு செய்தது நிரூபிக்கப்பட்டால் பதவி பறிக்கப்படுவது மட்டுமின்றி மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்கவும் தடை விதிக்கப்படும்.
மேலும் தினகரன் ஆதரவாளர்கள் கொடுத்த ரூ.20 டோக்கன் குறித்த தகவல்களையும் தேர்தல் பார்வையாளர்கள் திரட்டி வருவதாகவும், இதையும் அவருடைய செலவு கணக்கில் சேர்க்கவும் முயற்சிகள் நடந்து வருவதால் தினகரனின் எம்.எல்.ஏ பதவி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.