Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் ஆர்.கே.நகரில் நிற்காமல் இருந்தது இவருக்குத்தான் மகிழ்ச்சி: விஷால்

Advertiesment
, வியாழன், 28 டிசம்பர் 2017 (04:23 IST)
விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடந்தது. இந்த விழாவில் விஷால் பேசியதாவது:

ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய திரைப்படம் இரும்புத்திரை. ஆனால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டதால் படம் வர தாமதமாகியது. நான், என் படம், என் வாழ்க்கை என நினைத்திருந்தால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்றிருக்கவே மாட்டேன். பொதுநலன் சார்ந்து சிந்தித்ததால் தான் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்றேன். என்னைப் பற்றி பல்வேறு கருத்துகள், அவதூறுகள் வரலாம். ஆனால் நான் கண்ணாடியைப் பார்க்கும்போது என்னை நான் குற்றமற்றவனாக பார்க்க வேண்டும் என நினைப்பேன். அப்படி தான் நடக்கிறேன். கண்ணாடி தான் என் நன்பன் என்றார். நான் ஆர்.கே நகர் தேர்தலில் நிற்கமுடியாமல் போனதற்கு இயக்குநர் மித்ரன் மகிழ்ந்திருப்பார். ஏனென்றால் ஒருவேளை நின்றிருந்தால் இன்னும் படம் வெளிவர தாமதமாயிருக்கும்' என்று பேசினார்

மேலும் வரும் ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கலைவிழாவின்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று படக்க்குழுவினர் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பின்னணி பாடகி சித்ராவுக்கு ஹரிவராசனம் விருது