வாரியமோ, குழுவோ, ஆணையமோ ஏதோ ஒன்று சட்டப்படி அமைக்க வேண்டும் என்று அதை திட்டம் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இதற்கு 6 வார கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதைத்தொடர்ந்து மத்திய அரசு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள திட்டம் என்ற என்ன என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கால அவகாசம் வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தது.
இந்த இரண்டு வழக்குகளும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வரைவு திட்டத்தை மத்திய அரசு மே 3ஆம் தேதிக்குள் தயார் செய்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி என்ன திட்டம் அமைக்க வேண்டுமோ அதை அமைக்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்தது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி வரைவு திட்டத்தை சமர்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இனியும் மத்திய அரசு கால தாமதம் செய்ய முடியாது. ஆனால் இந்த வரைவு திட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் குறிப்பிடப்படுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய அரசு எந்த திட்டம் வேண்டுமானாலும் அமைக்கலாம்.
ஆனால் தமிழக அரசு சார்ப்பில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றம் நடுவர்மன்ற தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது. இதனால் வரைவு திட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.