Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணிகள் ஏற்கும் முதல்வர் வேட்பாளரா எடப்பாடியார்?

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (10:15 IST)
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பது குறித்து, பாஜக தேசிய தலைமை முடிவு செய்யும் என எல்.முருகன் பேட்டி. 
 
பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் எல்.முருகன். அப்போது அவர் கூறியது பின்வருமாறு... 
 
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களின் நன்மைகள் குறித்து, தமிழகம்  முழுவதும் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ஆயிரம் சிறப்பு கூட்டங்களை நடத்தி விவசாயிகளிடம் விளக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏற்படுத்தப்பட்ட கூட்டணியே, சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும். 
 
எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தேசிய தலைவர்கள் அறிவிப்பார்கள். எங்களுக்கான தொகுதிகளை தேர்தல் நேரத்தில் கேட்போம். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பது குறித்து பாஜக தேசிய தலைமை முடிவு செய்து அறிவிக்கும் என குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments