Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

எல்லாத்தயும் ஒதுக்கி வைத்து விட்டு அண்ணாத்தயில் கவனம் செலுத்தும் ரஜினி - வைரல் புகைப்படம்!

Advertiesment
அண்ணாத்த
, திங்கள், 14 டிசம்பர் 2020 (16:42 IST)
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது அரசியல் வருகையை உறுதி செய்த போது ’அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டியது தன்னுடைய கடமை என அறிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே டிசம்பர் 15 முதல் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு தனி விமானத்தில் படப்பிடிப்பிற்காக சென்றார்.

இது சம்மந்தமான புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில் இப்போது படப்பிடிப்பு தளத்தில் விக் வைத்து இளமையான தோற்றத்தில் ஹாயாக சேரில் அமர்ந்திருக்கும் ரஜினிகாந்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’விஜய் சேதுபதியின் புதுப் படத்திற்கான தடை நீக்கம்..’’ ரசிகர்கள் மகிழ்ச்சி!!