வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பேசும்போது மக்களவை தொகுதியோடு மாநிலங்களவை தொகுதி கேட்கும் நடைமுறையை முதன்முதலில் கொண்டு வந்தது பாமக தான். அந்த வகையில் வரும் தேர்தலிலும் அதிமுகவிடம் 5 மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்க பாமக தலைமை முடிவு செய்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
அந்த ஒரு மாநிலங்களவை தொகுதியின் மூலம் அன்புமணி மனைவி செளம்யாவை எம்பி ஆக்க பாமக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை அதிமுக தரப்பிடம் நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.