Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவனை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி !

Advertiesment
கணவனை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி !
, வியாழன், 21 நவம்பர் 2019 (16:59 IST)
திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள பல்லடம் பகுதியில் வசித்து வந்த உமாதேதி என்பவர் தனது கணவரை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள பல்லடம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தனது தலையில் காயத்துடன் கடந்த 17 ஆம் தேதி, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்தார்.
 
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். வெங்கடேசனின்  மனைவி உமாதேவியிடமும் விசாரித்தனர். ஆனால் அவர் கூறிய கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது.
 
அதனால், சந்தேகம் அடைந்த போலீஸார் மேலும் அவரிடம் விசாரணையை தீவிரப் படுத்தினர். அதற்கு தன் கணவர் இருசக்கர  வாகனத்தில தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறினார்.
 
இதனையடுத்து, பிரேத பரிசோதனை முடிவில், வெங்கடேசன் தலையில் பலமாக அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
 
அப்போது, போலீஸார்,  இதுகுறித்து , உமாதேவியிடம் கேட்டனர். அப்போது, சம்பவம் நிகழ்ந்த அன்று கணவன் மது அருந்திவிட்டு தன்னிடம் தகராறில் ஈடுபட்டதால், உருட்டுக்கட்டையால் தாக்கியதை உமாதேவி ஒப்புக்கொண்டார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த முதல்வர் யார்? ரஜினி பேச்சுக்கு இமிடியட் ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடியார்!