மனைவி நல வேட்பு விழா ....கரூரில் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் 250 பேர் கலந்து கொண்டு கொண்டாட்டம்
கரூர் எல்.ஜி.பி நகர் பகுதியில் உள்ள அறிவுத்திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அருள்தந்தை வேதாந்திரி மகரிஷி அவர்களின் மனைவி அன்னை லோகாம்பாள் அவர்களின் பிறந்த தினமான ஆகஸ்ட் 30 ம் தேதி அன்று மனைவி நல வேட்புநாளாக அறிவித்து அதனை விழாவாக அந்த நாள் முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரை கொண்டாடுவது வழக்கம், இல்லற வாழ்வில் இன்ப துன்பங்களை எல்லாம் சரிபாதியாக ஏற்று கொண்டு குடும்பத்திற்காகவும், கணவருக்காகவும் பல தியாகங்களை செய்து வரும் மனைவிகள் அறிவுத்திருக்கோயில் சார்பாக பாராட்டும் விதமாகவும், போற்றும் விதமாகவும் மாண்புமிக்க மனைவிகளுக்காக பெருமை சேர்க்கும் விதமாக விழா நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொருவரையும் மனைவிகள் கணவர்களை வாழ்த்துவதும், கணவர்களை மனைவிகள் வாழ்த்துவதும் அவர்கள் கண்ணோடு கண்ணாக காந்தப்பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சியும், கைகளை இருவரும் நாடியோடு நாடி இணைத்து ஒருவொரையொருவர் வாழ்த்தினர். மனைவிகளுக்கு கணவர்கள் மலர் கொடுத்தல் நிகழ்ச்சியும் அரங்கேறியது. இதற்கான முழு ஏற்பாடுகளை அறிவுத்திருக்கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்