Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெர்மனில் இருந்து வாட்ஸ் ஆப்பில் பரவிய குழந்தைகள் ஆபாச வீடியோ – சென்னையில் சிபிஐ சோதனை !

ஜெர்மனில் இருந்து வாட்ஸ் ஆப்பில் பரவிய குழந்தைகள் ஆபாச வீடியோ – சென்னையில் சிபிஐ சோதனை !
, புதன், 16 அக்டோபர் 2019 (08:23 IST)
ஜெர்மனியில் குழந்தைகளிடம் அத்துமீறிக் கைது செய்யப்பட்ட குற்ற்வாளி பரப்பிய ஆபாச வீடியோக்கள் சம்மந்தமாக சென்னையில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.

சாஷே டிரெப்கே என்ற ஜெர்மனியைச் சேர்ந்த காமுகன் 2015- 2016 ஆகிய ஒரு ஆண்டில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் குழந்தைகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டதை வீடியோக்களாக எடுத்து அதை  483 பேர் கொண்ட 29  வாட்ஸ் ஆப் குழுக்களில்  பகிர்ந்ததாக விசாரணையில் கூறியுள்ளார்.

சம்மந்தப்பட்ட 483 பேர்களில் 7 பேர் இந்தியர்கள் எனவும் அந்த நபர்களின் அந்த நபர்களின் செல்போன் எண்களை சிபிஐக்குக் கடந்த ஜனவரி மாதம் அனுப்பியது ஜெர்மனி தூதரகம். இது சம்மந்தமாக சிபிஐ அதிகாரிகள் நேற்று நாடு முழுவதும் 6 இடங்களில் சோதனை நடத்தினர். அதில் சென்னையில் உள்ள வினோத் கண்ணா மற்றும் கோஷிமா ஆகியோரின் வீடுகளில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  இந்த விசாரணையில் ஏதேனும் ஆவணங்கள் கிடைத்ததா என்பதை சிபிஐ இன்னும் வெளியிடவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீழடியில் மூடப்படும் 54 குழிகள்: அடுத்தகட்ட ஆய்வு எப்போது?