Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாதக் குழந்தையை தவிக்கவிட்டு.... தாய், தந்தை அடுத்தடுத்து தற்கொலை...

Webdunia
சனி, 25 மார்ச் 2023 (16:29 IST)
திருவாரூர்  மாவட்டம் நன்னிலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக 3 மாத ஆண் குழந்தையை தனியாக தவிக்கவிட்டு, கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சோத்தக்குடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் மகன் சபாஷ்(25). இவர் ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். இவர், அப்பகுதியைச் சேர்ந்த அஷ்டலட்சுமி(20) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த ஒராண்டிற்கு முன்பு சுபாஷ் , அஷ்டலட்சுமியை அழைத்துக்கொண்டு வெளியூரில் திருமணம் செய்துகொண்டார்.

இத்தம்பதியினருக்கு 3 மாத ஆண்குழந்தை ஒன்று   உள்ளது. இந்த நிலையில், காதல் திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு  ஏற்பட்டதாகவும், சுபாஷ் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுபாஷ் எலிபேஸ்ட் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று, ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சில நாட்களுக்கு முன் வீடு திரும்பினார்.

இதனால் மனவுளைச்சலில் இருந்த அஷ்டலட்சுமி, இன்று தன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  வேலைக்குச் சென்றிருந்த சுபாஷ் இதுபற்றி தகவல் அறிந்து வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், ஒரு மணி நேரத்தில் அவருக்கும் பருத்திக்கொள்ளைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments