எஸ்.ஐ வில்சன் சுடப்பட்டது ஏன்? அதிர வைக்கும் வாக்குமூலம்

வியாழன், 16 ஜனவரி 2020 (11:13 IST)
கன்னியாகுமரியில் எஸ்.ஐ. ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதற்கான காரணம் என்னவென குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 
 
கன்னியாகுமரியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த வில்சன் என்ற எஸ்.ஐ –யை ஸ்கார்பியோ காரில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். 
 
இதனால் படுகாயமடைந்த வில்சனை சக காவலர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர்  சிகிச்சை பலனிள்ளாமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் பதற்றம் அதிகமான நிலையில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் பேசினார். 
 
எனவே, துரிதப்படுத்தப்பட்ட விசாரணையின் அடுத்த கட்டமாக கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டது. பின்னர் அவர்களை தீவிரமாக விசாரணை செய்தும் வந்தது. இதன்பின்னர் இவர்கள்தான் குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட்டனர். 
 
இந்நிலையில், வில்சனை கொன்றது ஏன் என குற்றவாளிகள் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வந்ததால் வில்சனை சுட்டுக் கொன்றதாக அவர்கள் கூறியுள்ளனராம். மேலும், போலீஸார் தங்களை என்கவுன்ட்டர் செய்யக் கூடும் என்பதால்  வில்சனை கொன்றதாக தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பொங்கல் பண்டிகை ஏன் எப்படி ... ஜல்லிக்கட்டு என்றால் என்ன ?