களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை குறித்து தகவல் தெரிவித்தால் 7 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனைச் சாவடியில் பணியற்றிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட இரண்டு பேரும் தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகிய இரண்டு பேரும் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், வில்சன் கொலையில் தொடர்புடைய அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகிய இரண்டு பேர் குறித்து தகவல் தெரிவித்தால், 7 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்காக 70103 63173 என்ற வாட்ஸ் ஆப் எண் 24 மணி நேரமும் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.