Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ந்து பிரச்சாரங்களை ரத்து செய்யும் விஜய்!.. அப்படி என்னதான் பிரச்சனை?...

Advertiesment
tvk vijay
தவெக தலைவர் விஜய் தொடர்ந்து தனது பிரச்சாரங்களை ரத்து செய்வது பேசு பொருளாக மாறியிருக்கிறது.. விஜய் வெளியே வந்தாலே அவரை பார்ப்பதற்காக பல ஆயிரம் மக்கள் கூடி விடுகிறார்கள்.. அவர்களின் பிரச்சார வாகனத்தின் எல்லா பக்கத்திலும் இரு சக்கர வாகன வாகனங்களில் அவரின் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் பின் தொடர்கிறார்கள்.

அவரின் வாகனம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே அந்த வாகனத்திற்கு முன்னால் சென்று செல்பி எடுக்கிறார்கள்.. அதிலும் சிலர் ஆர்வக்கோளாறில் வண்டியின் மீது ஏறி விடுகிறார்கள். ஒருபக்கம் விஜய் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிடுவதால் பாதுகாப்பு கருதி போலீசாரும் பிரச்சாரங்களை ரத்து செய்ய சொல்கிறார்கள்.. சில சமயங்களில் விஜய் தாமதமாக செல்வதால் அங்கு பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது..

ஒரு பக்கம் சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் விஜய் தொடர்ந்து பிரச்சாரங்களை ரத்து செய்து வருகிறார். ஏற்கனவே கொளத்தூர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, புரசைவாக்கம், எழும்பூர் போன்ற தொகுதிகளில் விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்தார்.

கடலூரில் இரண்டு முறை காவல்துறை அனுமதி கொடுத்தும் விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்தார். இன்று விஜய் போட்டியிடும் சென்னை பெரம்பூர் தொகுதியில் ஒவ்வொரு தெருவாக சென்று பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக அனுமதி கேட்டு போலீசாரும் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் திடீரென அந்த பிரச்சாரத்தையும் விஜய் ரத்து செய்து விட்டார். இதற்கு என்ன காரணம் என்பதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை..

நேற்று பெரம்பூர் வந்த விஜய் அங்கு தேர்தல் பணிமனைக்கு சென்றார். மேலும் அங்கு சில பெண்கள் வைத்த கோரிக்கையை ஏற்று விசில் சின்னத்தை கோலமாகவும் போட்டார்.. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியானது. இந்நிலையில்தான், இன்று பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை ரத்து செய்திருக்கிறார்.

தமிழகத்தில் வருகிற 21ம் தேதியோடு பிரச்சாரம் முடிவடைகிறது.. அப்படி பார்த்தால் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே கையில் இருக்கிறது.. இந்த மூன்று நாட்களில் விஜய் எத்தனை தொகுதிக்கு சென்ற பிரச்சாரம் செய்ய முடியும் என்பது கேள்வி எழுந்துள்ளது. ஒருபக்கம் விஜய் தங்களின் தொகுதியில் வந்து பிரச்சாரம் செய்யவில்லை என தவெக வேட்பாளர்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி.. மற்ற 2 மசோதாக்களையும் தாக்கல் செய்யாத மத்திய அரசு..!