Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கு செல்வது ஏன்?

Advertiesment
தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கு செல்வது ஏன்?
, வெள்ளி, 28 ஜூன் 2019 (07:41 IST)
விவரம் தெரிந்த நாள் முதல் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த தங்க தமிழ்ச்செல்வன், திமுகவில் இணைய விருப்பமில்லை என்றுதான் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வந்தார். ஆனால் அதிமுகவில் தான் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதாலும், அதிமுகவில் இணைய ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் வேறு வழியின்றி திமுகவில் இணைய அவர் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது
 
அதிமுகவில் இணைய தங்க தமிழ்ச்செல்வன், முதல்வர் ஈபிஎஸ் இடம் சில கோரிக்கைகள் வைத்தாராம். அதில் ஒன்று ராஜ்யசபா எம்பி பதவி. ஆனால் அவரது கோரிக்கைகளில் பாதியை மட்டுமே ஈபிஎஸ் டிக் செய்துள்ளார். அதில் ராஜ்யசபா எம்பி பதவி இல்லை. மேலும் தங்க தமிழ்ச்செல்வனை எந்த காரணத்தை முன்னிட்டும் அதிமுகவில் சேர்க்கக்கூடாது என்பதும் ஓபிஎஸ் தீவிரமாக இருந்ததாகவும் தெரிகிறது. இதனால் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணையும் முடிவை கைவிட்டதாக தெரிகிறது.
 
மேலும் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைய தயக்கம் தெரிவித்ததற்கு இன்னொரு காரணம், திமுகவில் இணைந்தால் அமமுக போலவே சொந்த காசைத்தான் செலவு செய்ய வேண்டும். கட்சியின் மூலம் எந்த நிதியும் வராது, வருமானமும் இருக்காது என்றும் கூறப்பட்டது. ஆனால் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளில் ஒன்றில் சேர்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை இருப்பதால் வேறு வழியின்றி அவர் திமுகவில் இணையவுள்ளார்.
 
webdunia
இன்று சட்டப்பேரவை கூடியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சில நிமிடங்களில் அவை ஒத்தி வைக்கப்படும். அதன்பின் அறிவாலயம் வரும் மு.க.ஸ்டாலின் முன் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையவுள்ளார் என்பதே இப்போதைய தங்க தமிழ்ச்செல்வனின் நிலையாக உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடக்கம்: பரபரப்பில் அரசியல் கட்சிகள்