Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உதயநிதிக்கு தெரிவிக்காத வாழ்த்தை துரைமுருகனுக்கு தெரிவித்தது ஏன்? ரஜினி வட்டாரம் பரபரப்பு தகவல்

Advertiesment
உதயநிதிக்கு தெரிவிக்காத வாழ்த்தை துரைமுருகனுக்கு தெரிவித்தது ஏன்? ரஜினி வட்டாரம் பரபரப்பு தகவல்
, சனி, 5 செப்டம்பர் 2020 (09:55 IST)
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட போது வாழ்த்து சொல்லாத நடிகர் ரஜினிகாந்த் இப்போது துரைமுருகன் மற்றும் டிஆர் பாலுவுக்கு வாழ்த்து சொல்லியது ஏன்? என ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் கூறும் தகவல்கள் பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளன
 
கடந்த ஆண்டு திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டபோது வாரிசு அரசியல் திமுகவில் தொடர்வதை ரஜினிகாந்த் விரும்பவில்லை என்றும் அதனால்தான் அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் அடிமட்ட தொண்டனாக இருந்து தற்போது பொதுச் செயலாளர் பதவி வரை உயர்ந்தவர் துரைமுருகன் என்றும் அவர் கட்சிக்காக கடுமையாக பாடுபட்டவர் என்றும் அதனால்தான் அவருக்கும் டிஆர் பாலுவுக்கும் ரஜினிகாந்த் வாழ்த்து சொன்னதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் வரும் நவம்பரில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் திமுகவில் உள்ள தனது ரசிகர்களை கவர்ந்திழுக்கவும் இந்த வாழ்த்தை அவர் தெரிவித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி வெறுப்பு அரசியல் இன்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நேர்மறை அரசியலான ஆன்மீக அரசியலை கையில் எடுத்துள்ள ரஜினிகாந்த், பிற கட்சிகளில் நல்லவை நடந்தாலும் அதைப் பாராட்டவும் தவற மாட்டார் என்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் கூறி வருகின்றனர்
 
ரஜினிகாந்த் வரும் நவம்பரில் கட்சி ஆரம்பித்து விடுவார் என்ற தகவல் திமுக வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது அவர் திமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளருக்கு வாழ்த்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 2021 வரை கொரோனா தாக்கம் இருக்கும்: எய்ம்ஸ் இயக்குனர் அதிர்ச்சி தகவல்