Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதனைபற்றி பேச ஆளுங்கட்சிக்கு ஏன் தோன்றவில்லை? ராஜேஸ்வரி பிரியா

rajeshwari priya
, திங்கள், 4 செப்டம்பர் 2023 (14:14 IST)
‘’பல்லடம் அருகே நான்கு பேர் வெட்டி கொலை செய்யபட்டனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது’’  என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் அருகே பல்லடம் என்ற பகுதியில் நேற்று ஒரு நபர் வீட்டின் அருகே மது அருந்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார், மோகன், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகியோர் அந்த மது அருந்திய நபரை கண்டித்தனர்.

இதனை அடுத்து மது அருந்தி நபர் தன்னுடைய நண்பர்களை அழைத்து வந்து அந்த வீட்டில் புகுந்து நான்கு பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.  இந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அந்த கிராம மக்கள் சாலை மறியல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,   இதுகுறித்து அ.ம.அ.க தலைவர் ராஜேஸ்வரி பிரியா தன் சமூக வலைதள பக்கத்தில்,  

‘’பல்லடம் அருகே நான்கு பேர் வெட்டி கொலை செய்யபட்டனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.

காரணம்  வீட்டின் அருகே மது குடித்தவர்களை தட்டி கேட்டதால் கொலை செய்யபட்டனர் என்பதனை நினைத்தால் எவ்வளவு மோசமான சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று மனம் கொந்தளிக்கிறது.

தினம்தினம் மதுவினால் பல உயிர்கள் அழிந்து வருகின்றன இதனைபற்றி பேச ஆளுங்கட்சிக்கு ஏன் தோன்றவில்லை? மதுவை ஒழிப்போம் என்று மேடை போட முடியுமா உங்களால்? போதையை ஒழிப்போம் என்று நீங்கள் போடும் மேடைகளில் மது ஒரு போதை பொருள் என்று திமுக ஏன் பேச மறுக்கிறது?

சாராயத்திலிருந்து வரும் வருமானத்திற்கு மாற்று கண்டறிய பொருளாதார நிபுணர் குழு அமைக்கப்பட்டதா இல்லை சாராய விற்பனையை இன்னும் அதிகப்படுத்த தான் இந்த நிபுணர் குழுவா?

சனாதனம் என்றால் அர்த்தம் என்னவென்று தெரியாத காரணத்தினால் உதயநிதி ஒழிக்க கிளம்பிவிட்டார்.

மதுவைபற்றி முழுமையாக தெரிந்தமையால் மதுவை ஒழிக்க முற்படமாட்டார். மக்கள் அனைவருக்கும் திராவிட மாடல் நன்றாக புரிகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 பேர் சொந்தச் செலவில் ஏழுமலையான் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்-தேவஸ்தான உறுப்பினர்