மாற்றுத்திறனாளிகளின் நலன்காக்கும் நம் கழக அரசு, விளையாட்டுத்துறையிலும் மாற்றுத்திறனாளிகளின் வெற்றிக்கு துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சீனியர் - ஜுனியர் பிரிவுகளில் முதல் 3 இடங்களைப் பிடிக்கின்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்க நம்முடைய திராவிட மாடல் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்காக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, அனைத்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் நலச்சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்ற நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றோம்.
மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி நடைபாதை அமைத்தது முதல் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்துக்கு தனி ஆணையரை அமைத்தது வரை, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், மாற்றுத்திறனாளிகளின் நலன்காக்கும் நம் கழக அரசு, விளையாட்டுத்துறையிலும் மாற்றுத்திறனாளிகளின் வெற்றிக்கு துணை நிற்கும் என்று உரையாற்றினோம். என்று தெரிவித்துள்ளார்.