Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வாயால் கெட்ட தேமுதிக: ராஜ்யசபா தொகுதி கிடைக்காததன் பின்னணி

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (19:40 IST)
மார்ச் 26-ஆம் தேதி தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் அதிமுகவின் மூன்று வேட்பாளர்கள் மற்றும் திமுகவின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே தேர்தல் நடைபெறாமல் ஆறு பேர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்க அதிமுக தலைமை பரிசீலனை செய்தது. இதற்காக தேமுதிக நிர்வாகிகள் குழுவிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் கூட்டமொன்றில் பேசிய போது அதிமுக தலைவர்களை ஒருமையில் பேசியது மட்டுமன்றி ’கொடுப்பதை வாங்கும் கட்சியல்ல தேமுதிக என்றும் திருப்பிக் கொடுக்கும் கட்சிதான் தேமுதிக என்றும் பஞ்ச் டயலாக் பேசியுள்ளார்
 
மேலும் தேமுதிக கட்சிக்கு 2% மட்டுமே வாக்குகள் இருப்பதாக கூறும் அதிமுகவினர் எங்கள் வீட்டு வாசலில் கூட்டணிக்காக காத்திருந்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். விஜய பிரபாகரனின் இந்த பேச்சுதான் அதிமுக தலைமையை அதிருப்தி  அடைய செய்ததாகவும், இதனால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா தொகுதி கொடுப்பதை கொடுக்கும் முடிவை அதிமுக தலைமை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே திமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பேசிய பேச்சு காரணமாகத்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போதே ராஜ்யசபா தொகுதிக்கான ஒப்பந்தம் செய்ய மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. எனவே மீண்டும் தேமுதிக தன்னுடைய வாயால் ஒரு தொகுதியை இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments