Publish Date: Wed, 11 Mar 2026 (13:02 IST)
Updated Date: Wed, 11 Mar 2026 (13:06 IST)
தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. விஜய் அடிப்படையில் ஒரு பிரபலமான நடிகர் என்பதால் அவருக்கு முதல் நிலை வாக்காளர்களும், இளைஞர்களும் அதிக அளவில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? யார் ஆட்சி அமைப்பார்? என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.. இது தொடர்பான கருத்துக்கணிப்புகளும் வெளியாகி வருகிறது..
அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த KK Survey என்கிற தனியார் நிறுவனத்தின் அங்கமான பாராவீல் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் தற்போது ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்காளர்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 70 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
கருத்துக்கணிப்பின் முடிவில் திமுக கூட்டணி 41.5 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 36.2 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும் எனவும், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 13.6 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடிக்கும் எனவும், சீமானின் நாம் தமிழர் கட்சி 7.9 சதவீத வாக்குகளை பெற்று நான்காவது இடத்தை பிடிக்கும் எனவும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருக்கிறது..
திமுக முதலிடத்தில் இருந்தாலும் தவெகவும், அதிமுகவும் இணைந்தால் வாக்கு சதவீதம் 49.8 சதவீதம் வருகிறது. தவெக வாக்குகளை பெறுவதோடு நிறைய தொகுதிகளில் வெற்றியும் பெற்றால் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து திமுகவை தோற்கடிக்க வாய்ப்பிருக்கிறது.