தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது? பரபரப்பு தகவல்!

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (14:26 IST)
தமிழக பாஜக தலைவராக இருந்தார் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்றார். இதனை அடுத்து கடந்த சில மாதங்களாகவே தமிழக பாஜக தலைவர் இல்லாமல் இயங்கி வருகிறது.
 
இந்த நிலையில் ஜனவரி மாதத்திற்குள் தமிழக பாஜக தலைவர் பதவிக்கான நபர் அறிவிக்கப்படும் என ஏற்கனவே டெல்லி வட்டாரங்கள் கூறியிருந்தன. தமிழக பாஜக தலைவர் பட்டியலில் கேடி ராகவன், பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன், சிபி ராதாகிருஷ்ணன், எஸ்வி சேகர், வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பிரபலங்கள் இருப்பதாக கூறப்பட்டது. சமீபத்தில் கூட எஸ்வி சேகர் தான் பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டால் தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நாளை தமிழக பாஜக தலைவர் யார் என்பதை பாஜக மேலிடம் அறிவிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து தமிழக பாஜக தலைவர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments